search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சூர்யாவுக்கு கமல் கொடுத்த ரோலக்ஸ் வாட்ச்.. லோகேஷ் கனகராஜ் கூறிய புதிய தகவல்
    X

    சூர்யா - கமல்

    சூர்யாவுக்கு கமல் கொடுத்த ரோலக்ஸ் வாட்ச்.. லோகேஷ் கனகராஜ் கூறிய புதிய தகவல்

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் விக்ரம்.
    • இப்படம் மூன்று வாரங்களை கடந்து திரையரங்குகள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வசூல் ரூ.400 கோடியை தாண்டி விடும் என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. இந்த வெற்றியால் திரையுலகினர் பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். இளையராஜாவும் வாழ்த்துத்துகள் சகோதரரே என்று சமூக வலைத்தளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த வெற்றிக்கு காரணமானவர்களுக்கு பரிசு கொடுத்த கமல்ஹாசன், முதலில் கவுரவ வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை வீடு தேடிப்போய் பரிசளித்தார். உதவி இயக்குனர்களுக்கு பைக் வாங்கிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் வாங்கிக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார்.

    சூர்யா - கமல்

    இந்த நிலையில் சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்ச் புதிதாக வாங்கிக் கொடுக்கப்பட்ட வாட்ச் இல்லை என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய சமயத்தில் முதன் முதலில் வாங்கிய விலை அதிகமான பொருள் இந்த ரோலக்ஸ் வாட்ச்தான். இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்தார். மனதுக்கு நெருக்கமான இந்த வாட்ச்சைத்தான் சூர்யாவுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன் என்று லோகேஷ் கூறியுள்ளார்.

    Next Story
    ×