என் மலர்
சினிமா செய்திகள்
கமல்ஹாசனுடன் மீண்டும் இணையும் அபிராமி
- நடிகர் கமல்ஹாசன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகை அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜனவரியில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பிலும் இணையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான 'விருமாண்டி' திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் பேச்சு வழக்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தற்போது இவர் கமலுடன் மீண்டும் இணையவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.