search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முடியல.. புதுச்சேரியில் லியோ காட்சி ரத்து.. நொந்துபோன ரசிகர்கள்
    X

    முடியல.. புதுச்சேரியில் 'லியோ' காட்சி ரத்து.. நொந்துபோன ரசிகர்கள்

    • விஜய் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'.
    • 'லியோ' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் ரசிகர்கள் சார்பில் 19-ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் வல்லவன் தெரிவித்தார்.

    இதனிடையே தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு காட்சிகள் வெளியாவதால் புதுச்சேரியில் காலை 7 மணிக்கு படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக 'லியோ' படத்தின் காலை 7 மணி காட்சியை ரத்து செய்ய புதுச்சேரி திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மேலும், தமிழ்நாட்டில் நாளை காலை வெளியாகும் நேரத்தில் புதுச்சேரியிலும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×