என் மலர்
சினிமா செய்திகள்
மீண்டும் லோகேஷ் -விஜய் கூட்டணியில் இணைந்த விஜய் சேதுபதி.. இங்கதான் டுவிஸ்டே இருக்கு
- விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
லியோ
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 'லியோ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலானது.
லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி -விஜய்
இந்நிலையில், லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் பின்னணி குரல் கொடுப்பதற்காக லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து மூன்று நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தீயாய் செய்தி பரவி வருகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் -விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.