என் மலர்
சினிமா செய்திகள்
பவர் கிக்கு.. லியோ ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
- இப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 'லியோ' படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, 'லியோ' படம் வெளியாகும் தினமான 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.