என் மலர்
சினிமா செய்திகள்
'லியோ' படத்தை வெளியிட தடை.. ஏமிரா இதி..? புலம்பும் ரசிகர்கள்
- விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
- இப்படம் 19-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி பல மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஐதராபாத் நீதிமன்றத்தில் சீதா ராமா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் நாக வம்சி என்பவர் இந்த படத்தின் பெயர் 'லியோ' என்பதை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து மனுதாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் 'லியோ' படத்தின் தெலுங்கு பதிப்பை வரும் 20-ஆம் தேதி வரை திரையிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
'லியோ' தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'லியோ' திரைப்படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் 9 மணி காட்சியை 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.