search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரியன் வெர்ஷனில் வெளியான நான் ரெடி பாடல்.. மாஸ் காட்டிய பாடகர்
    X

    கொரியன் வெர்ஷனில் வெளியான 'நான் ரெடி பாடல்'.. மாஸ் காட்டிய பாடகர்

    • 'லியோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • ‘நான் ரெடி தான்’ பாடல் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகி தற்போது வரை ரசிகர்களை கவனம் ஈர்த்து வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் 'நான் ரெடி தான்' பாடல் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகி தற்போது வரை ரசிகர்களை கவனம் ஈர்த்து வருகிறது.


    இந்நிலையில், 'நான் ரெடி தான்' பாடல் கொரியன் வெர்ஷன் வெளியாகியுள்ளது. அதாவது, தென் கொரியா நாட்டை சேர்ந்த பாடகர் ஒருவர் 'நா ரெடி தான்' பாடலின் கொரியன் வெர்ஷனை பாடி அதற்கு நடனமாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    Next Story
    ×