என் மலர்
சினிமா செய்திகள்
கைதில செத்தவரு 'விக்ரம்' படத்தில் எப்படி வந்தாரு? ரசிகர்களுக்கு பதிலளித்த லோகேஷ்...
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றி வருகிறது.
- 'விக்ரம்' பட இயக்குனர் லோகேஷ் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. இதில் திரையுலக முன்னணி பிரபலங்களான கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கமலின்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் இப்படத்தை தயாரித்துள்ளது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வரும் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைபெற்று வருகிறது.
இதையடுத்து 'விக்ரம்' படம் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளத்தின் மூலம் பதில்களை அளித்தார். அதில் ரசிகர் ஒருவர் 'கைதி திரைப்படத்தில் இறந்த அர்ஜுன் தாஸ் கதாப்பாத்திரம் விக்ரமி படத்தில் எப்படி உயிருடன் இருக்கிறார்? இதை நம்ப முடியவில்லை' என கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த லோகேஷ், 'கைதி திரைபடத்தில் நெப்போலியன் எனும் கான்ஸ்டபிலால் அன்புவின் (அர்ஜுன் தாஸ்) தாடை மட்டுமே உடைக்கப்பட்டது. அதனால், 'விக்ரமில்' அன்புவின் தாடை பகுதியில் தையல் அடையாளம் இருக்கும். இது குறித்து கைதி 2-ல் மேலும் விளக்கப்படும்' என கூறினார்.
Only Anbu's jaw was broken by Napoleon in #kaithi, hence the stitch mark in #Vikram.. this will be explained further in #kaithi2 #AskDirLokesh https://t.co/I3GGlWfyJ1
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 8, 2022