என் மலர்
சினிமா செய்திகள்
மிஷ்கினுக்கு ஒரு மில்லியன் நன்றிகள் சொன்னாலும் போதாது - இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லியோ
இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லியோ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
மிஷ்கின் - லோகேஷ் கனகராஜ்
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மை டியர் மிஷ்கின் சார்.. உங்களுடன் இவ்வளவு நெருங்கிய நிலையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இதை வெளிப்படுத்த ஒரு மில்லியன் நன்றிகள் சொன்னாலும் போதாது. நான் உங்களுக்கு ஒருபோதும் போதுமான அளவு நன்றி சொல்ல முடியாது இருந்தாலும் ஒரு மில்லியன் நன்றிகள்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
My Dear @DirectorMysskin sir,
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 1, 2023
A million thanks won't suffice to express how grateful and fortunate I feel to have had the opportunity to work with you in such close capacity. We had an absolute blast having you on sets Sir.I can never thank you enough but a million thanks ! #Leo pic.twitter.com/0UGHOlsegW