search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்.. லியோ பட பாடல் புரோமோவை வெளியிட்ட லோகேஷ்
    X

    "இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்".. லியோ பட பாடல் புரோமோவை வெளியிட்ட லோகேஷ்

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது.
    • நா ரெடி பாடலின் புரோமோ வீடியோவை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.




    இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியானது. இந்நிலையில் நா ரெடி பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்டு விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடலை உங்கள் விஜய் பாடியுள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    Next Story
    ×