என் மலர்
சினிமா செய்திகள்
லியோ பிளாஷ் பேக் பொய்யாக கூட இருக்கலாம்- சர்ச்சையை கிளப்பிய லோகேஷ்
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
- இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்திருந்தார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சனம் ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.
இப்படம் என்னதான் வசூலை குவித்து வந்தாலும் இதன் பிளாஷ் பேக் காட்சிகளை ரசிகர்கள் முதல் நாளிலிருந்தே விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'லியோ படத்தின் பிளாஷ் பேக் காட்சிகள் பொய்யாக கூட இருக்கலாம்' என்று லோகேஷ் கனகராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், "நேர நெருக்கடி காரணமாக 45 நிமிடங்கள் இருந்த பிளாஷ் பேக் காட்சிகளை 20 நிமிடங்களாக குறைத்தேன், மேலும், நீங்கள் கதையை பார்த்திபன் கூறி கேட்கவில்லை, கதையை இருதயராஜாக நடித்த மன்சூர் அலிகான்தான் கூறியுள்ளார், அது பொய்யாக கூட இருக்கலாம்" என்று கூறினார்.
இதனை பார்த்த ரசிகர்கள் 'படத்தின் இறுதியில் ஏதாவது ஒரு காட்சியில் இது பொய் என்று தெரிவித்து இருக்கலாம். படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றபின் பேட்டியில் இப்படி சொல்வது ஏற்புடையது அல்ல' என்று விமர்சித்து வருகின்றனர்.