என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![விரைவில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் மாவீரன் விரைவில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் மாவீரன்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/19/1868193-1.webp)
மாவீரன்
விரைவில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்'
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து 'மாவீரன்' திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.
மாவீரன்
இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
மாவீரன்
இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை வருகிற ஜூலை 28-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.