என் மலர்
சினிமா செய்திகள்

நெட்ஃபிளிக்ஸில் முதல் இடம் பிடித்த மாமன்னன் திரைப்படம்

- மாரி செல்வராஜ் இயக்கத்தி ல்உதயநிதி நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படம் நேற்று முன்தினம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர்.
மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14-ம் திரையரங்குகளில் வெளியானது. மேலும் இப்படம் ஜூலை 27ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Even those drops of blood that were shed rejoice #Maamannan
— Mari Selvaraj (@mari_selvaraj) July 30, 2023
Trending #1in India on #Netflix #MaamannanBlockbuster @Udhaystalin @RedGiantMovies_ @KeerthyOfficial #Vadivelu @arrahman #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off… pic.twitter.com/wRlcBXJEej