என் மலர்
சினிமா செய்திகள்

X
இளையராஜா
திருவண்ணாமலை கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம்
By
மாலை மலர்5 Dec 2022 2:30 PM IST (Updated: 5 Dec 2022 2:30 PM IST)

- தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு சில தினங்களுக்கு முன்பு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது.
- இவர் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார். சில தினங்களுக்கு முன்பு இளையராஜாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.
சாமி தரிசனம் செய்ய வந்த இளையராஜா
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், இளையராஜா இன்று சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
×
X