என் மலர்
சினிமா செய்திகள்
"நா ரெடி" பாடல் எதிர்ப்பு: அதிரடி காட்டிய படக்குழு
- 'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி எதிர்ப்புகள் கிளம்பியது.
- இந்த பாடலுக்காக படக்குழு அதிரடி காட்டியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. அதே சமயத்தில் இந்த பாடல் போதைப் பொருளை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாகவும், விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. மேலும் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் "நா ரெடி" பாடலின் லிரிக் வீடியோவில் புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும் என டிஸ்க்ளைமர் (Disclaimer) இணைக்கப்பட்டுள்ளது.