என் மலர்
சினிமா செய்திகள்
புதிய அறிவிப்பை வெளியிட்ட ஜென்டில்மேன்-2 படக்குழு
- ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
- இப்படத்தை 'ஆஹா கல்யாணம்' படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.
1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருந்தார்.
அதன்படி 'ஜென்டில்மேன்-2' படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன்-2 படத்திற்கு கீரவாணி இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் நயன்தாரா சக்ரவர்த்தி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். 'ஜென்டில்மேன்-2' படத்தை 2014-ஆம் ஆண்டு நாணி நடிப்பில் வெளியான 'ஆஹா கல்யாணம்' படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.
இந்நிலையில் 'ஜென்டில்மேன் 2' படத்தின் புதிய அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் மௌனராகம், நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தளபதி, இந்தியன் உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றிய தோட்டா தரணி இணைந்துள்ளார். மேலும் தோட்டா தரணியோடு இணைந்து அவரது மகள் ரோகிணி தரணியும் இப்படத்தில் பணியாற்றவுள்ளதாக தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.