என் மலர்
சினிமா செய்திகள்
அவனவன் ஆயிரம் கதை சொல்லுவான்.. லியோ குறித்து மன்சூர் அலிகானின் புதிய வீடியோ
- விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- லியோ படத்தில் பல்வேறு திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் படம் லியோ. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது. படம் வெளியாகி 12 நாட்களில் ரூ. 540 கோடி வசூலித்து இருப்பதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
லியோ படத்தில் மன்சூர் அலிகான், ஃபிளாஷ்பேக் கதை சொல்லுவார். இந்த பிளாஷ்பேக் படத்தில் பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. ரசிகர்களிடையே பல விமர்சனங்கள் எழுந்தது. மன்சூர் அலிகான் பொய் சொல்லலாம் என்று படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மன்சூர் அலிகான் படத்தில் பேசிய வீடியோ காட்சியை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
அந்த வீடியோவில், "அவனவன் ஆயிரத்தெட்டு கதை சொல்லுவான். ஒவ்வொன்னுக்கும் நிறைய பெர்ஸ்பெக்டிவ் இருக்கும். இது என்னோட பெர்ஸ்பெக்டிவ். 1999," என்று தெரிவித்து இருக்கிறார்.
Since you asked for it ? Here you go!Perspective scene footage perfect ah irukaa? ? #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @PharsFilm @ahimsafilms @GTelefilms @SitharaEnts… pic.twitter.com/rKm2i6jqcK
— Seven Screen Studio (@7screenstudio) October 31, 2023