என் மலர்
சினிமா செய்திகள்
மலையாளத்தில் பிரம்மாண்டமாக களமிறங்கும் லைக்கா
- லைக்கா நிறுவனம் 'லால் சலாம்' எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
- அக்ஷய்குமார் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தையும் லைக்கா தயாரிக்கிறது.
இந்தியாவின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் வெற்றிகரமான பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது மலையாள திரையுலகில் இதுவரை மேற்கொள்ளப்படாத பிரம்மாண்டமான பொருட்செலவில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
இதன் மூலம் மலையாள திரையுலகில் பிரம்மாண்டமான தயாரிப்புடன் லைக்கா நிறுவனம் களமிறங்குகிறது. இந்நிறுவனம் தற்போது இயக்குநர் ஷங்கர் - 'உலகநாயகன்' கமல்ஹாசன் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'இந்தியன் 2' படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், 'லால் சலாம்' எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து 'ஜெய்பீம்' புகழ் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' படத்தையும், மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தையும் தயாரிக்கிறது. இதுதவிர அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தையும் தயாரிக்கிறது.
தமிழில் மட்டுமல்லாமல் இந்தியில் முன்னணி நட்சத்திர நடிகரான அக்ஷய்குமார் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறது.
மேலும் லைக்கா புரொடக்ஷன்ஸின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் ஜி. கே. எம். தமிழ் குமரன் இந்த படைப்புகளை தொடர்ந்து வேறு சில முன்னணி நட்சத்திர நடிகர்களிடம் அடுத்தடுத்த பிரம்மாண்டமான படைப்புகள் குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்.