என் மலர்
சினிமா செய்திகள்
பா.இரஞ்சித் வெளியிட்ட யோகிபாபு பட ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்
- இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் திரைப்படம் 'பொம்மை நாயகி'.
- இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா.இரஞ்சித் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடற்கரையில் குழந்தைக்கு எதையோ யோகிபாபு காட்டுவது போன்று இந்த போஸ்டர் இடம்பெற்றிருக்கிறது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Presenting the First Look of #BommaiNayagi starring @iYogiBabu ✨#BommaiNayagiFirstLook #HBDYogiBabu
— pa.ranjith (@beemji) July 22, 2022
@officialneelam @YaazhiFilms_ @vigsun @shan_shanrise @athisayam_rajj @SundaramurthyKS @EditorSelva @KaviKabilan2 @TherukuralArivu @_STUNNER_SAM @thehari___ pic.twitter.com/X6NuYiXhfH