என் மலர்
சினிமா செய்திகள்

விக்ரம்
இதிலும் அவர் எனக்கு கிடைக்கவில்லை - நடிகர் விக்ரம்

- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
- இப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொன்னியின் செல்வன்
இதில் நடிகர் விக்ரம் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், "இந்த படத்தில் எனக்கு இருக்கும் ஒரு சோகம் இதிலும் ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவில்லை.
ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த 'ராவணன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் மீது காதல் கொள்ளும் கதாபத்திரத்தில் நடித்திருந்தாலும் கடைசியில் ராவணன் இறந்துவிடுவார். இதை தொடர்ந்து இந்த முறை 'பொன்னியின் செல்வன்' படத்தில், இணைந்துள்ளோம். ஏன் ஐஸ்வர்யா இப்படி செய்தீர்கள்" என்று ஜாலியாக பேசினார்.