என் மலர்
சினிமா செய்திகள்
கதாபாத்திரங்களாக மாறிய விக்ரம், திரிஷா.. காரணம் என்ன..?
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
- இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
பொன்னியின் செல்வன்
ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
பொன்னியின் செல்வன்
இந்நிலையில், நடிகர் விக்ரம் மற்றும் திரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனுக்காக சமூக வலைதளத்தில் ஆதித்ய கரிகாலன், குந்தவை என தற்காலிகமாக தங்களது பெயர்களை மாற்றியுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, மற்ற நடிகர்களும் தங்களது இணைய பக்கத்தில் பெயர்களை மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.