என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![இந்த ரத்தமும் போர்க்களமும் அவளை மறக்கத் தான்.. வெளியானது பொன்னியின் செல்வன் டீசர் இந்த ரத்தமும் போர்க்களமும் அவளை மறக்கத் தான்.. வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/08/1726138-cover1.jpg)
பொன்னியின் செல்வன்
இந்த ரத்தமும் போர்க்களமும் அவளை மறக்கத் தான்.. வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "பொன்னியின் செல்வன்-1".
- "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தில் பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பொன்னியின் செல்வன்
இப்படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியதேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவையாக திரிஷாவும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன்-1 படத்தின் டீசர் இன்று (08.07.2022) வெளியாகியுள்ளது. இதனை தமிழில் சூர்யாவும், ஹிந்தியில் அமிதாப் பச்சனும், மலையாளத்தில் மோகன் லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.