என் மலர்
சினிமா செய்திகள்

கமல்ஹாசன்
பொன்னியின் செல்வன் படத்தில் கமல்?

- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்-1" .
- "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தில் பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.
இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன்" வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது.
பொன்னியின் செல்வன்
இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் -1, திரைப்படத்தில் நடிகர் கமல் பின்னணி குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி கமல் குரல் கொடுத்திருந்தால் யாருக்கு கொடுத்திருப்பார்? என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.