என் மலர்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் -2
அடுத்த பாடல் அறிவிப்பை வெளியிட்ட 'பொன்னியின் செல்வன்'

- பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பொன்னியின் செல்வன் -2
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் அடுத்த பாடலான 'வீரா ராஜ வீர' பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாகவுள்ளதாக கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து படக்குழு தெரிவித்துள்ளது.
From the first beat to the last, #VeeraRajaVeera is pure adrenaline!
— Lyca Productions (@LycaProductions) April 7, 2023
Lyrical video from tomorrow ?#CholasAreBack #PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX @actor_jayamravi… pic.twitter.com/fOxuS8z5Et