search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வீரா ராஜ வீர.. லைக்குகளை குவிக்கும் பொன்னியின் செல்வன் பட பாடல்
    X

    வீரா ராஜ வீர பாடல்

    'வீரா ராஜ வீர'.. லைக்குகளை குவிக்கும் பொன்னியின் செல்வன் பட பாடல்

    • பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் அடுத்த பாடலான 'வீரா ராஜ வீர' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    வீரா ராஜ வீர பாடல்

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் அடுத்த பாடலான 'வீரா ராஜ வீர' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த பாடல் தற்போது இணையத்தில் பலரின் லைக்குகளை குவித்து வருகிறது.



    Next Story
    ×