search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    போர் வீரனா சொல்.. பொன்னியின் செல்வன் புதிய பாடல்..
    X

    பொன்னியின் செல்வன்

    போர் வீரனா சொல்.. பொன்னியின் செல்வன் புதிய பாடல்..

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.


    பொன்னியின் செல்வன்

    ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    பொன்னியின் செல்வன்

    இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் 'சொல்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. திரிஷா மற்றும் சோபிதா துலிபாலா இடம்பெற்றுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது



    Next Story
    ×