என் மலர்
சினிமா செய்திகள்
பெங்களூர் பஸ் டிப்போவுக்கு திடீரென விசிட் செய்த ரஜினிகாந்த்
- நடிகர் ரஜினிகாந்த் தன் நடிப்பினாலும், ஸ்டைலினாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
- ரஜினி படப்பிடிப்பு இல்லாத போது பெங்களூரில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் ஆரம்ப காலக்கட்டத்தில் பேருந்து நடத்துனராக இருந்தவர். அதன்பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தன் நடிப்பினாலும், ஸ்டைலினாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் ரஜினி 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்துடன் அழைத்து வருகின்றனர்.
ரஜினி படப்பிடிப்பு இல்லாத போது பெங்களூரில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது தன்னுடன் வேலை பார்த்த நண்பர்களின் வீட்டிற்கு சென்று வருவார்.
ராகவேந்திரா சுவாமி மடத்தில் ரஜினி
இந்தநிலையில், ரஜினிகாந்த் தான் பணியாற்றிய பெங்களூர், ஜெயநகர் பேருந்து டிப்போவுக்கு திடீரென சென்றுள்ளார். அப்போது பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடினார். தாம் பணியாற்றிய நினைவலைகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். பின்னர் பேருந்து இயக்குனர் மற்றும் நடத்துனருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
மேலும், ரஜினிகாந்த், பெங்களூர் ராகவேந்திரா சுவாமி மடத்தில் தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.