என் மலர்
சினிமா செய்திகள்
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி - ஜெய்ஷாவிற்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்
- ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது.
- ‘லால் சலாம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவர் தன் திறமையினாலும் ஸ்டைலினாலும் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரசிகர்கள் இவரை 'சூப்பர் ஸ்டார்' என்று அன்போடு அழைத்து வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது.
தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இவர் 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படப்பிடிப்புகளை முடித்த ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல அரசியல் தலைவர்களை சந்தித்தார். நடிகர் ரஜினிக்கு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், ஜெய்ஷாவிற்கு நன்றி தெரிவித்து ரஜினி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ-யிடம் இருந்து பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. ஜெய்ஷா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
I am extremely happy to receive the prestigious Golden Ticket from BCCI for @ICC @CricketWorldCup 2023. My heartfelt thanks to BCCI..
— Rajinikanth (@rajinikanth) September 20, 2023
Dear Jayshahji… it was a pleasure to meet you..Thank you very much for your warm words and thoughts.@BCCI @JayShah #GoldenTicket