என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![புஷ்பா படத்தில் மீண்டும் குத்தாட்டம் போடும் சமந்தா புஷ்பா படத்தில் மீண்டும் குத்தாட்டம் போடும் சமந்தா](https://media.maalaimalar.com/h-upload/2022/06/28/1720380-oo3.jpg)
புஷ்பா - சமந்தா
புஷ்பா படத்தில் மீண்டும் குத்தாட்டம் போடும் சமந்தா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான படம் புஷ்பா.
- இப்படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா...' என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கிய திரைப்படம் புஷ்பா. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா...' என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் தற்போது வரை ரசிகர்கள் பலரின் முணுமுணுப்பாக இருந்து வருகிறது.
புஷ்பா - சமந்தா
இப்படம் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டி நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெருமளவு காட்சிகள் படமாக்கப்பட்டன. இதன் 2-ம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் வெளிநாட்டைச் சேர்ந்த முன்னணி நடிகையும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புஷ்பா - சமந்தா
இந்நிலையில் இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்துப் பாடல் இடம்பெறுவுள்ளது. இதன் முதல் பாகத்தைப் போலவே 2-ம் பாகத்திலும் ஒரு பாடலுக்கு சமந்தாவை கவர்ச்சி நடனமாட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இப்பாடலுக்காக அவருக்கு பெருமளவு சம்பளம் பேசப்பட்டு வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.