என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் - சத்யராஜ் உருக்கம் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் - சத்யராஜ் உருக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2022/06/22/1716782-sathya.jpg)
பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் - சத்யராஜ் உருக்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது.
விஜயகாந்த் - சத்யராஜ்
மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விஜயகாந்த் - கமல் - ரஜினி - சத்யராஜ்
இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். அந்த வீடியோவில், வணக்கம் கேப்டன் என்று எல்லோராலும் பாசத்துடனும் நேசத்துடனும் அழைக்கப்படும் என் அன்பு நண்பன் விஜி பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.