என் மலர்
சினிமா செய்திகள்

சிம்பு - பத்து தல
பத்து தல படப்பிடிப்பு தளத்தில் சிம்பு.. வைரலாகும் புகைப்படங்கள்

- சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படத்தை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிம்பு 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பத்து தல
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'பத்து தல' படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
பத்து தல
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றன். ரசிகர்களுடன் சிம்பு இருப்பது போன்றும், இயக்குனர் ஒபிலி என்.கிருஷ்ணா சிம்புவுடன் பேசுவது போன்றும் அந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.