என் மலர்
சினிமா செய்திகள்
'சூரரைப் போற்று' ரீமேக் பணியில் தீவிரம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்
- இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார், 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
சூரரைப் போற்று
2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கி வருகிறார். 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
சுதா கொங்கரா - ஜி.வி.பிரகாஷ்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் படத்தின் பாடல்கள் ரெக்கார்ட் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இயக்குனர் சுதா கொங்கராவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#SooraraiPottru Hindi songs recording on progress … coming up with fresh songs for it … super excited @Sudha_Kongara @akshaykumar @Suriya_offl @Abundantia_Ent @rajsekarpandian pic.twitter.com/7sZf4vUBIt
— G.V.Prakash Kumar (@gvprakash) December 27, 2022