என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![கர்ணன் ஆகிறார் சூர்யா? குஷியில் ரசிகர்கள் கர்ணன் ஆகிறார் சூர்யா? குஷியில் ரசிகர்கள்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/13/1897387-sur2.webp)
சூர்யா
கர்ணன் ஆகிறார் சூர்யா? குஷியில் ரசிகர்கள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சூர்யா
இந்நிலையில் சூர்யாவின் 44வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யா 44 படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா இயக்கவுள்ளதாகவும், இப்படத்தின் மூலம் சூர்யா இந்தியில் அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் மகாபாரத சரித்திர கதையாக உருவாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்திற்கு கர்ணா என்று பெயரிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.