என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு
- திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- இவ்விழா வருகிற 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.
தெய்வத் திருமகள் - கும்கி
இதில், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் என 23 தயாரிப்பாளர்களுக்கு 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் என 20 பேருக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
வாகை சூடவா
சிறந்த குறும்படங்களில் பணியாற்றிய சிறந்த இயக்குநர்கள், சிறந்த ஒளிப்பதிவாளர்கள், சிறந்த ஒலிப்பதிவாளர்கள், சிறந்த படத்தொகுப்பாளர்கள் மற்றும் சிறந்த படம் பதனிடுவர்கள் என 30 பேருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், 1 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தகக்து.