என் மலர்
சினிமா செய்திகள்
முழு வீடியோ இப்பதான் பார்த்தேன்.. வைரலாகும் தமனின் பதிவு..
- விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த படத்தின் முதல் பாடல் ‘ரஞ்சிதமே’ சமீபத்தில் வெளியானது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
வாரிசு
இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. தொடர்ந்து இந்த பாடல் 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது.
வாரிசு
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ். தமன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ரஞ்சிதமே முழு வீடியோ இப்பதான் பார்த்தேன். தியேட்டர் சீட்ல யாருமே உட்காரமாட்டீங்க. உங்களோட நானும் ஒரு ரசிகனா" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
#Ranjithamey full Video Ippo dhannn Paathennn. ❤️ theatre la Seat 💺 laaa yaaruu maee okkaramatttinggaaa 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 DOT 💪🏼🚀🚀🚀🚀🚀🚀 ungalloodaaa nannummmm orruuu rasigaaanna 🫶#Anna @actorvijay 💃💃💃💃💃💃💃💃💃
— thaman S (@MusicThaman) November 8, 2022
Pinniiiii peddalllllll 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥