என் மலர்
சினிமா செய்திகள்
திறக்கப்பட்ட வரலாற்றின் பெட்டகம் தங்கலான்
- விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’.
- இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
தங்கலான் போஸ்டர்
இந்நிலையில், இந்த டீசர் யூடியூபில் ஒன்பது மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், திறக்கப்பட்ட வரலாற்றின் பெட்டகம் என்று குறிப்பிட்டுள்ளது.
Unlocking History's Vault ?#ThangalaanTeaser strikes over 9M+ views
— Studio Green (@StudioGreen2) November 7, 2023
Watch Teaser▶️ https://t.co/Oxbmf5LuoG#Thangalaan #ThangalaanFromJan26@Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe @officialneelam @parvatweets @MalavikaM_ @DanCaltagirone @gvprakash @NehaGnanavel… pic.twitter.com/G08GoQVc9i