என் மலர்
சினிமா செய்திகள்

அடுத்தடுத்த அறிவிப்பு.. ரசிகர்களை கவரும் அஜித் படக்குழு..

- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் 'ஏ.கே.61'.
- இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் 'வலிமை' படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
துணிவு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (21-09-2022) வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
துணிவு இரண்டாவது லுக் போஸ்டர்
தற்போது 'துணிவு' படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Mass + Class #Thunivu second poster#AK61 #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth @BoneyKapoor @BayViewProjOffl @SureshChandraa #NiravShah @GhibranOfficial #Milan @SupremeSundar_ @editorvijay #Kalyan #AnuVardhan @premkumaractor #MSenthil @SuthanVFX #CSethu #SameerPandit pic.twitter.com/iiVxejhsTW
— Zee Studios (@ZeeStudios_) September 22, 2022