என் மலர்
சினிமா செய்திகள்
X
ஆக்ஷன் காட்சியில் மிரட்டும் அதர்வா.. கவனம் ஈர்க்கும் டீசர்..
Byமாலை மலர்12 Aug 2022 2:13 PM IST (Updated: 12 Aug 2022 2:55 PM IST)
- இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் "ட்ரிக்கர்".
- இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் "ட்ரிக்கர்". இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். மேலும், சீதா, அருண்பாண்டியன், முனீஷ்காந்த், சின்னிஜெயந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ட்ரிக்கர்
ப்ரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆக்ஷன், த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
Next Story
×
X