என் மலர்
சினிமா செய்திகள்
லியோ எல்.சி.யூ தான்- உண்மையை உடைத்த உதயநிதி
- லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'லியோ'.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் நாளை (அக்டோபர் 19) பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' எல்.சி.யூ-வில் இல்லை என்று லோகேஷ் கூறினாலும் இப்படம் எல்.சி.யூ-வில் இணையும் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.
உதயநிதி பதிவு
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு உண்மையை வெளிப்படுத்திவிட்டது. அதாவது, 'லியோ' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் இணையத்தில் பதிவிட்டிருந்தார். அதில் எல்.சி.யூ (#LCU) ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார். இது லியோ எல்.சி.யூ-வில் வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த பதிவை வைரலாக்கும் ரசிகர்கள் உதயநிதி உண்மையை உடைத்துவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.