search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு.. வைரலாகும் புகைப்படம்
    X

    மாமன்னன் படக்குழுவுடன் கேக் வெட்டிய வடிவேலு

    மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு.. வைரலாகும் புகைப்படம்

    • மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். .
    • இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டினார்.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    மாமன்னன் படக்குழுவுடன் கேக் வெட்டிய வடிவேலு

    இந்நிலையில் சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி ஜிகேஎம் தமிழ் குமரன் மற்றும் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

    மாமன்னன் படக்குழுவுடன் கேக் வெட்டிய வடிவேலு

    அப்பொழுது படக்குழுவினர் வடிவேலுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைலராகி வருகிறது.

    Next Story
    ×