என் மலர்
சினிமா செய்திகள்
X
அப்ளிகேஷன் டிசைனராக நடிகர் விஜய்.. வெளியான புதிய தகவல்..
Byமாலை மலர்20 July 2022 7:56 PM IST
- இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
- வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
வாரிசு
மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரிசு திரைப்படத்தில் 'விஜய் ராஜேந்திரன்' என்ற கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக நடிகர் விஜய் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
×
X