என் மலர்
சினிமா செய்திகள்
வாரிசு: பிரம்மாண்ட மேடையில் விஜய்.. தமனுடன் அனிருத் இசை..?
- ’வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வாரிசு
தொடர்ந்து 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' போன்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.
வாரிசு
'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று படக்குழு நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவிற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேடை அமைக்கும் பணியை நேரில் சென்று பார்த்த தமன்
இதனை இசையமைப்பாளர் தமன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் தமனுடன், அனிருத் இருக்கும் புகைப்படங்களை தமன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், 'வாரிசு' இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#SSMB28 & #NTR30 ❤️🔥❤️🔥🎵🎵
— thaman S (@MusicThaman) December 21, 2022
A drive Finally 🏎️ pic.twitter.com/3wo0TgoPWS