என் மலர்
சினிமா செய்திகள்

வாரிசு
ஐந்து நாட்களில் ரூ.150 கோடி வசூல்.. 'வாரிசு' படக்குழு அறிவிப்பு..

- இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘வாரிசு’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வாரிசு
பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வாரிசு போஸ்டர்
இந்நிலையில், 'வாரிசு' படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
#MegaBlockbusterVarisu crosses 150Cr+ collection worldwide in just 5 days nanba ?
— Sri Venkateswara Creations (@SVC_official) January 16, 2023
Aatanayagan ?#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @iamRashmika @Lyricist_Vivek @7screenstudio @TSeries#Varisu #VarisuPongal pic.twitter.com/Qj1vzbuEpa