என் மலர்
சினிமா செய்திகள்
மிஸ்ஸான அஜித் படம்.. டோனியை இயக்கும் விக்னேஷ் சிவன்
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன்.
- இவர் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தினை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனியுடன் இணைந்துள்ளார். அதாவது டோனி மற்றும் யோகி பாபு நடிக்கும் விளம்பர படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதுதொடர்பான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு அஜித் படம் போனால் என்ன டோனியை இயக்குகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.