என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![பாட்ஷா ஸ்டைலில் டோனிக்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்.. வீடியோ வைரல் பாட்ஷா ஸ்டைலில் டோனிக்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்.. வீடியோ வைரல்](https://media.maalaimalar.com/h-upload/2023/07/12/1914186-10.webp)
பாட்ஷா ஸ்டைலில் டோனிக்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்.. வீடியோ வைரல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன்.
- இவர் தற்போது புதிய படம் இயக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.
2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது புதிய படம் இயக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.
விக்னேஷ் சிவன் பதிவு
இந்நிலையில், நடிகர் விக்னேஷ் சிவன் கிரிகெட் வீரர் டோனியுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் டோனி, விக்னேஷ் சிவன் டீ- சர்ட்டில் கையொப்பமிடுகிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த விக்னேஷ் சிவன், டோனியின் கைகளை பிடித்து முத்தமிடுகிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர். மேலும், பாட்ஷா ஸ்டைலில் டோனிக்கு முத்தம் கொடுப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.