என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![யோகிபாபு படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் யோகிபாபு படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/12/1931387-24.webp)
யோகிபாபு படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லக்கி மேன்'.
- இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் 'லக்கி மேன்'. இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. 'லக்கி மேன்' படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
லக்கிமேன் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'லக்கி மேன்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். 'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
— Yogi Babu (@iYogiBabu) August 12, 2023