search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் ஆண்டனி மகள் மறைவு- யுவன் சங்கர் ராஜா இரங்கல்
    X

    விஜய் ஆண்டனி மகள் மறைவு- யுவன் சங்கர் ராஜா இரங்கல்

    • விஜய் ஆண்டனி மகள் மீரா உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
    • இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. இவரது உடல் இன்று கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "விஜய் ஆண்டனியின் இழப்பை நினைத்து வருந்துகிறேன். ஒரு தந்தையாக, விஜய் ஆண்டனி இப்போது என்ன வேதனையை அனுபவித்திருப்பார் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இந்த தாங்க முடியாத இழப்பை தாங்கும் சக்தியை அந்த குடும்பத்திற்கு எல்லாம் வல்ல இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன்.


    யுவன் சங்கர் ராஜா பதிவு

    நம் அன்றாட வாழ்க்கையிலும், நம் குடும்பம் மற்றும் நட்பு வட்டாரங்களிலும் நம்மைச் சுற்றியுள்ள பலர் அமைதியாக பல்வேறு மன மற்றும் உணர்ச்சி வேதனைகளை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கை ஒருவரை நம்பிக்கையற்ற பாதையில் தள்ளலாம் அந்த இருள் சூழ்ந்த தருணத்தில், அவர்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் அழகான எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள் என்பதை மறந்துவிடுவார்கள்.

    வலிமை மற்றும் தைரியத்திற்கு சான்றாக இருக்கும் இந்த சவாலான காலங்களில் உதவியை நாடுமாறு மக்களை குறிப்பாக இளைய தலைமுறையினரை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.



    Next Story
    ×