என் மலர்
சினிமா செய்திகள்
கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்...
- படத்தை ராஜூ முருகனின் உதவி இயக்குநர் தினா ராகவன் இயக்க உள்ளார்.
- தென்சென்னையில் வாழும் சாமானியனின் யதார்த்த வாழ்வியலோடு அரசியலை நகைச்சுவையாக கூறும் படமாக உருவாகிறது.
நடிகர் கவுதம் கார்த்திக் ' கிரிமினல் ' மற்றும் ' மிஸ்டர் எக்ஸ்' ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், இப்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
'ஜிப்ஸி', 'ஜப்பான்' படங்களை இயக்கிய ராஜூ முருகன் வசனம் எழுதும் படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். அவரின் பிறந்தநாளையொட்டி GK 19 பட அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தை ராஜூ முருகனின் உதவி இயக்குநர் தினா ராகவன் இயக்க உள்ளார். தென்சென்னையில் வாழும் சாமானியனின் யதார்த்த வாழ்வியலோடு அரசியலை நகைச்சுவையாக கூறும் படமாக உருவாகிறது.
இந்த படத்தை எம். ஜி. ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன் மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இணைந்து தயாரிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்