என் மலர்
சினிமா செய்திகள்
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஜோதிகா
- சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்திருப்பதுடன் சிறப்பு யாகமும் நடத்தியுள்ளனர்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'கங்குவா'. இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. படக்குழு எதிர்ப்பார்த்த விமர்சனம் திரைப்படம் பெறவில்லை. பலர் இப்படத்தின் மீது எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோதிகா பதிவு ஒன்றை பதிவு செய்தார். அப்பதிவு இணையத்தில் வைரலானது.
சூர்யா அடுத்ததாக கார்த்தி சுப்பராஜ் இயக்கியுள்ள சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்திருப்பதுடன் சிறப்பு யாகமும் நடத்தியுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் நடிகை ஜோதிகா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த நடிகை ஜோதிகா ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, ரசிகர் ஒருவர் அன்புடன் கொடுத்த ஏழுமலையான் படத்தை பெற்றுக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
తిరుమల శ్రీవారిని దర్శించుకున్న నటి జ్యోతిక#tirumalatirupatidevasthanam #Actress #Jyothika #Tirumala #RTV pic.twitter.com/7Su80xr1z6
— RTV (@RTVnewsnetwork) November 27, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.