என் மலர்
சினிமா செய்திகள்
இந்தியன் 2 - ரசிகர்களுடன் திரையரங்கில் படம் பார்த்த கமல்ஹாசன், சங்கர்
- தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணியளவில் இந்தியன் 2 படம் வெளியானது.
- படம் வெளியான திரையங்குகள் முன்பு கூடிய ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் இந்தியன் 2. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் முதல் பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியன் 2 பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளார்.
இப்படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியன் 2 படத்தை வெளியிட தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணியளவில் இந்தியன் 2 படம் வெளியானது. படம் வெளியான திரையங்குகள் முன்பு கூடிய ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தை ரசிகர்களுடன் கண்டுகளிக்க சென்னையில் உள்ள திரையரங்குக்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் ஆகியோர் வருகை வந்தனர்.
திரையங்கு முன்பு கூடியிருந்த ரசிகர்கள் இந்தியன் 2 படத்தின் காட்சிகள் கொண்ட டி-சர்ட்டை அணிந்திருந்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
'இந்தியன் 2' படத்தை பார்க்க திரையரங்குக்கு வந்த நடிகர் நாசர், லட்சக்கணக்கான மக்களைப் போலவே நானும் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். சங்கர் சாரும், கமல் சாரும் நிறைய சர்ப்ரைஸ் கொடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியும் என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.